மாவட்ட செய்திகள்

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம் + "||" + The cell phone exploded as he walked into the helmet and struck the young man

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்

ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம்
சூளகிரியில் ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி மோட்டார் சைக்கிளில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார்.


அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

செல்போன் வெடித்தத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது
தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. திருமானூரில் கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்: மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம்
திருமானூரில் புதிதாக கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. கல்லூரி மாணவிகள் கூட்டத்துக்குள் மினி பஸ் புகுந்தது 12 பேர் படுகாயம்
குழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்துக்குள் மினி பஸ் புகுந்ததில் 12 ேபர் படுகாயம் அடைந்தனர்.
4. ஓடும் பஸ்சில் நெல்லை மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்த வாலிபர் - போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்
ஓடும் பஸ்சில் நெல்லை மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
5. நாகர்கோவிலில் கடைகளுக்குள் புகுந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம்
நாகர்கோவிலில் அரசு பஸ் கடைகளுக்குள் புகுந்து டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.