தர்மபுரியில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடந்தது


தர்மபுரியில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 15 July 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது குறித்த போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமையில் நடந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மற்றும் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

பாராட்டு சான்றிதழ்

பொம்மிடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான வழக்கு மற்றும் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக பிடித்த போலீசாருக்கு டி.ஐ.ஜி. பிரதீப்குமார் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறைக்கு சொந்தமான இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை அவர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜ்குமார், செல்லபாண்டியன், மேகலா, கார்த்திகேயன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story