மாலூர் அருகே விளைநிலங்களில் புகுந்து 5 காட்டு யானைகள் அட்டகாசம் தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிரம்

மாலூர் அருகே விளைநிலங்களில் புகுந்து 5 காட்டு யானைகள் அட்டகாசம் தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 15 July 2019 3:30 AM IST (Updated: 15 July 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

மாலூர் அருகே விளைநிலங்களில் புகுந்து 5 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த காட்டு யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோலார் தங்கவயல்,

மாலூர் அருகே விளைநிலங்களில் புகுந்து 5 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த காட்டு யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா பனிகிபுரா, காட்டேரி ஆகிய கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து வெளியேறி 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மாலூர் வனப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தன. இந்த காட்டு யானைகள், பனிகிபுரா, காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்தன. வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு அந்த காட்டு யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் 5 காட்டு யானைகள் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறி மாலூர் வனப்பகுதிக்குள் புகுந்துள்ளன.

வனப்பகுதிக்குள் விரட்ட தீவிரம்

அந்த காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள பனிகிபுரா, காட்டேரி கிராமங்களில் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவை விளைநிலங்களில் உள்ள தக்காளி, பீன்ஸ் ஆகிய பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து மாலூர் வனத்துறையினருக்கு அந்தப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறை அதிகாரி சக்கரபாணி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 5 காட்டு யானைகளையும் தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story