விபத்தில் உயிரிழந்த பி.எஸ்.என்.எல். என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.95 லட்சம் இழப்பீடு லோக் அதாலத் மூலம் தீர்வு
விபத்தில் உயிரிழந்த பி.எஸ்.என்.எல். என்ஜினீயரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 95 லட்சம் இழப்பீடாக வழங்கியது. லோக் அதாலத் மூலம் இந்த வழக்கிற்கு தீர்வு காணப் பட்டது.
தானே,
விபத்தில் உயிரிழந்த பி.எஸ்.என்.எல். என்ஜினீயரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 95 லட்சம் இழப்பீடாக வழங்கியது. லோக் அதாலத் மூலம் இந்த வழக்கிற்கு தீர்வு காணப் பட்டது.
லோக் அதாலக்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள சமரசத்துக்கு உட்பட்ட வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி லோக் அதாலத் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. லோக் அதாலத்தில், திருமண பிரச்சினை, தொழிலாளர் தகராறு, செக் மோசடி, வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தானேயில் நடந்த லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 2000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
என்ஜினீயர் சாவு
இதில் குறிப்பாக விபத்து மற்றும் காயம் காரணமாக இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட 174 வழக்குள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக இவர்களுக்கு ரூ.12.61 கோடி பெற்று தரப்பட்டது.
தானே மாவட்டம் சின்ச்பாடா பகுதியில் வசித்து வந்தவர் தாதாஹரி(வயது45). பி.எஸ்.என்.எல்.யில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உஸ்மனாபாத்தில் இருந்து குடும்பத்தினருடன் காரில் தானேக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது கல்யாண், சவர்னே விலேஜ் அருகே வந்தபோதுஎதிரே வந்த லாரி ஒன்று இவரது கார் மீது மோதியது. இதில், காரில் இருந்த தாதாஹரி பலியானார். தாதாஹரி விபத்தில் உயிரிழந்த போது ரூ.89 ஆயிரத்து 231 சம்பளம்பெற்று வந்திருந்தார்.
இதையடுத்து உயிரிழந்த தாதாஹரியின் குடும்பத்தினர் ரூ.1¾ கோடி இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ரூ.95 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கு நேற்று லோக் அதாலத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.95 லட்சம் இழப்பீடாக தர ஒப்புக்கொண்டது.
இதன்படி இழப்பீட்டு தொகைகான காசோலை முதன்மை மாவட்ட நீதிபதி என் ஆர் போர்கர் மற்றும் காப்பீட்டு அதிகாரிகள் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story