கிராம தொழில்கள் ஆணையத்தில் வேலை
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சுருக்கமாக கே.வி.ஐ.சி. எனப்படுகிறது.
உதவி டைரக்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சி.ஏ., பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் மற்றும் இதர பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்கள் உள்ளன. பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்சி கியூட்டிவ், அசிஸ்டன்ட் போன்ற அலுவலக பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். www.kvic.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜூலை 31-ந் தேதியாகும்.
Related Tags :
Next Story