உருக்கு ஆணையத்தில் மருத்துவ பணியிடங்கள்


உருக்கு ஆணையத்தில் மருத்துவ பணியிடங்கள்
x
தினத்தந்தி 15 July 2019 5:37 PM IST (Updated: 15 July 2019 5:37 PM IST)
t-max-icont-min-icon

உருக்கு ஆணைய நிறுவனத்தில் மருத்து அதிகாரி மற்றும் துணை மருத்துவ பணியிடங்களுக்கு 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (Sail) என்று அழைக்கப்படுகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் உருக்கு ஆலை நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி மற்றும் துணை மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 361 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக நர்சிங் சிஸ்ட்டர் பணிக்கு 234 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 81 இடங்களும் உள்ளன. இவை தவிர டயட்டீசியன், போட்டோகிராபர், டிரெஸ்ஸர், லாண்டரி ஆபரேட்டர், அட்டன்ட், ஜூனியர் மேனேஜர், மெடிக்கல் ஆபீசர், ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பெரும்பாலான பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரி பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-8-2019-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story