மாவட்ட செய்திகள்

குலசேகரம் அருகேகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை + "||" + Near Kulasegaram Suicide by a married teenager

குலசேகரம் அருகேகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

குலசேகரம் அருகேகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
குலசேகரம் அருகே நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம், 

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குலசேகரம் நாககோடு அருகே உள்ள அம்பலத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 37), பெயிண்டர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுஜூ (34) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுனில்குமாருக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் சுனில்குமார் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் சுஜூ மனமுடைந்த நிலையில் இருந்தார்.

பின்னர் மாலையில் சுனில்குமார் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் சுஜூ விஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.