குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நீர்நிலைகளை பராமரிக்க அரசு முன்வர வேண்டும் ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நீர்நிலைகளை பராமரிக்க அரசு முன்வர வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
கரூர் காந்திகிராமத்தில் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கலாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநிலக்குழு அறிவித்ததன் பேரில் கரூரில் இன்று (செவ்வாய்க் கிழமை) மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நீர்நிலைகளை கணக்கீடு செய்து அதனை பராமரிக்க அரசு முன்வர வேண்டும்.
கரூர் நகராட்சியில் வீட்டுவரி, குப்பைவரி என மக்களிடம் வரிவசூலிக்கின்றனர். ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் சில பகுதிகளில் சாலைவசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
எனவே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் வடிவேலன், பொருளாளர் ஜெயராஜ், பாக்கியம், சக்திவேல் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர் கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story