திட்டக்குடி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி


திட்டக்குடி அருகே, மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.

திட்டக்குடி,

திட்டக்குடி அடுத்துள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் சுயம்பிரகாசம்(வயது 32). தனியார் பள்ளி தாளாளர். இவருடைய மனைவி சத்யா (29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சத்யா நேற்று பரிதாபமாக இறந்தார்.

அவர் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதனிடையே சுயம்பிரகாசம் மற்றும் அவரது மகன் செல்வா (10), மகள் செல்வஸ்ரீ (8), தாய் அஞ்சலி (60) ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மர்ம காய்ச்சலால் பெண் இறந்த சம்பவம் தொளார் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story