கர்ப்பிணியை பிரசவத்துக்கு அழைத்துச் சென்றபோது நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்


கர்ப்பிணியை பிரசவத்துக்கு அழைத்துச் சென்றபோது நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 16 July 2019 5:56 AM IST (Updated: 16 July 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணியை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றபோது நடுவழியில் 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று காலை நிறைமாத கர்ப்பிணி பரிசோதனைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசவத்துக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் விபத்தில் காயமடைந்த ஒருவரும், அவர்களுக்கு உதவியாக உறவினர்களும் வந்தனர்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் காட்டுக்குப்பம் அருகே வந்தபோது ஆம்புலன்சில் திடீரென்று பழுது ஏற்பட்டு நடு வழியில் நின்றது. இதனால் பிரசவத்துக்கு சென்ற பெண் மற்றும் அவரது உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.

இதையடுத்து அருகில் உள்ள தவளக்குப்பத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரைவழைக்கப்பட்டு, அதில் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். நடுவழியில் ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றதால் குறித்த நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் சுமார் ½ மணிநேரம் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவசரத்துக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையாக பராமரித்து நல்ல நிலையில் வைத்திருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story