மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிங்கமுத்து தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் லட்சுமணன், மாவட்ட தலைவர் தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story