மாவட்ட செய்திகள்

பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Congress-AIADMK party honors Kamarajar statue on birthday

பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி காமராஜர் சிலைக்கு காங்கிரஸ்-அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர்,

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முன்தினம் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் கட்சியினர் வெங்கமேடு, கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானாவில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு தலைமையில் கட்சியினர் உமையாள் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


மாலை அணிவித்து மரியாதை

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியின் தலைமையில் லாலாபேட்டையில் உள்ள காமராஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கரூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல், மத்திய நகர செயலாளர் மனோகரன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கரூர் மனோகரா கார்னரிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கரூர் நாடார் மஹாஜன சங்கம் உள்ளிட்ட நாடார் சமுதாய அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் காமராஜர், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
திண்டுக்கல், நிலக்கோட்டையில் பெரியார் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
2. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது.
3. பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
4. அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
5. 73வது சுதந்திர தினம்; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
இந்தியாவில் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊட்டியில் யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின.