தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் நல்லுசாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியனை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமையில் பேசியது கண்டனத்துக்குரியது எனக்கூறி கோஷம் எழுப்பினர். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story