கோவில்பட்டியில் 2,042 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் 2,042 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 17 July 2019 3:15 AM IST (Updated: 17 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 2,042 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 264 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். தொடர்ந்து அவர், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி, லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி, ஊத்துப்பட்டி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். மொத்தம் 2,042 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, நகரசபை ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன், பள்ளி தாளாளர் கதிர்வேல், தலைமை ஆசிரியை விக்னேசுவரி, பள்ளி குழு தலைவர் குருசாமி, பள்ளி குழு உறுப்பினர்கள் ஆழ்வார்சாமி, சுந்தரராவ் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.

Next Story