சுந்தரி நந்தா டெல்லிக்கு இடமாற்றம்: புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பாலாஜி ஸ்ரீவத்சவா நியமனம்
புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுவை மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக பாலாஜி ஸ்ரீவத்சவா நிய மிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை போலீஸ் டி.ஜி.பி.யாக சுந்தரி நந்தா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி புதுவை வந்து பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த ஓராண்டாக புதுவையில் பணிபுரிந்து வந்த சுந்தரி நந்தா தற்போது டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுவை மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மிசோரமில் பணிபுரிந்த பாலாஜி ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய டி.ஜி.பி.யான பாலாஜி ஸ்ரீவத்சவா 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவினை சேர்ந்தவர். அவர் இன்னும் ஒருசில தினங்களில் புதுச்சேரி வந்து பதவியேற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.
போலீஸ் டி.ஜி.பி.யான சுந்தரி நந்தா புதுவையில் பொறுப்பேற்றது முதல் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். இதன் எதிரொலியாக புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.
புதுவை காவல்துறையின் சிறந்த செயல்பாடு காரணமாக நெட்டப்பாக்கம் காவல்நிலையத்திற்கு அகில இந்திய அளவில் சிறந்த காவல்நிலையத்துக்கான விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story