விளையாடுவதற்காக காரில் ஏறிய 2 சிறுவர்கள் மூச்சுத்திணறி சாவு சிறுமி உயிருக்கு போராட்டம்


விளையாடுவதற்காக காரில் ஏறிய 2 சிறுவர்கள் மூச்சுத்திணறி சாவு சிறுமி உயிருக்கு போராட்டம்
x
தினத்தந்தி 17 July 2019 3:45 AM IST (Updated: 17 July 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

விளையாடுவதற்காக காரில் ஏறிய 2 சிறுவர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறாள்.

புல்தானா,

புல்தானா மாவட்டம் கவாலிபுரா பகுதியை சேர்ந்த ஆதில் சேக் ஜமீல்(வயது5), ஆசிம் சேக்(3) மற்றும் 5 வயது சிறுமி ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்கள் உள்பட 3 பேரும் விளையாட்டு ஆர்வத்தில் அங்கு பார்க்கிங் பகுதி யில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஏறியுள்ளனர். ஆனால் காரில் ஏறிய பின்னர் அவர்களால் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. இதனால் காருக் குள்ளேயே சிக்கிக்கொண்ட 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.

இந்தநிலையில் இரவு வரை சிறுவர்களை காணாததால் கலக்கம் அடைந்த பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நேற்று அதிகாலை 2 மணியளவில் காருக்குள் பேச்சு மூச்சின்றி கிடந்த 3 பேரையும் கண்டுபிடித்த போலீசார், அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதனையில், சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 5 வயது சிறுமிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 சிறுவர்கள் உயிரிழந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story