வானவில் : சென்னையில் விற்பனையை தொடங்கியது ‘ஏதெர்’


வானவில் : சென்னையில் விற்பனையை தொடங்கியது ‘ஏதெர்’
x
தினத்தந்தி 17 July 2019 2:20 PM IST (Updated: 17 July 2019 2:20 PM IST)
t-max-icont-min-icon

பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்கூட்டர் விற்பனையை சென்னையில் தொடங்கியுள்ளது.

‘ஏதெர் 450’ என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டர், இந்நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது. இதை சென்னையில் விற்பதற்கான முன்னோட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.31 லட்சமாகும். முன் பதிவு செய்வோர் ரூ.5 ஆயிரம் செலுத்தி பதிவு செய்யலாம். முதல் பேட்ச் செப்டம்பர் மாதத்திலும், அடுத்த பேட்ச் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திலும் டெலிவரி செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பிறகு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உடனடியாக வாகனத்தை பெற முடியும். பேட்டரி வாகனத்தின் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணமே பேட்டரி விலை அதிகமாக இருப்பதுதான்.

இதைக் கருத்தில் கொண்டு மாதாந்திர வாடகை அடிப்படையில் இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு அளிக்கும் திட்டத்தையும் இந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

மாத வாடகை ரூ.2,517 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் வாடகை விவரம் இந்த ஸ்கூட்டர் பெருமளவில் தயாராகும்போது தான் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Next Story