வானவில் : விவோவின் இஸட் சீரிஸ்


வானவில் : விவோவின் இஸட் சீரிஸ்
x
தினத்தந்தி 17 July 2019 6:01 PM IST (Updated: 17 July 2019 6:01 PM IST)
t-max-icont-min-icon

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் இந்தியாவில் இஸட் சீரிஸ் பிரிவில் புதிய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

 3 மாடல்களில் வெவ்வேறு ரேம் திறன் கொண்டவையாக இவை வந்துள்ளன. 4 ஜி.பி.-64 ஜி.பி. நினைவகம், 6 ஜி.பி.-64 ஜி.பி. நினைவகம், 6 ஜி.பி.-128 ஜி.பி. நினைவகம் கொண்டவையாக மூன்று மாடல்களில் வந்துள்ளன. இவற்றின் விலை ரூ.14,990, ரூ.16,990 மற்றும் ரூ.17,990 ஆகும். விவோ இஸட் 1 புரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிஸ்டம் ஆன் சிப் (எஸ்.ஓ.சி.) பிராசஸரைக் கொண்டது. இதில் 6.53 அங்குல தொடு திரை உள்ளது. இதன் திரை பஞ்ச் ஹோல் டிசைன் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன.

பிரதான கேமரா 16 மெகா பிக்ஸெல் சென்சாரும், 8 மெகா பிக்ஸெல் வைட் ஆங்கிள் கொண்ட இரண்டாவது கேமராவும், 2 மெகா பிக்ஸெல்லைக் கொண்ட மூன்றாவது கேமராவும் உள்ளன. முன்பக்க கேமரா 32 மெகா பிக்ஸெல்லாகும். நீண்ட நேரம் பேச வசதியாக 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. குறைந்த விலையில் நிறைவான பல அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனாக இது திகழ்கிறது. 

Next Story