வானவில் : குழந்தையைக் கண்காணிக்கும் கேமரா


வானவில் : குழந்தையைக் கண்காணிக்கும் கேமரா
x
தினத்தந்தி 17 July 2019 7:18 PM IST (Updated: 17 July 2019 7:18 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான வேலையாக மாறி வருகிறது. கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலங்களில் குழந்தைகளைப் பராமரிக்க வீட்டில் முதியவர்கள் பெரும் உதவியாக இருப்பர்.

குழந்தைகளை பார்த்துக்கொள்ள எப்போதும் யாராவது இருப்பர். ஆனால் இப்போது தனிக் குடித்தனம் பெருகிவருகிறது. கணவனும், மனைவியும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் பொருளாதார நெருக்கடி. இதனால் பல வீடுகளில் வேலைக்கு பணியாளர்களை அமர்த்திவிட்டு பணிக்குச் செல்லும் இல்லத்தரசிகள் அதிகம். இருந்தாலும் அலுவலகத்திலும் குழந்தை பற்றிய எண்ணம் தாய்க்கு இருந்து கொண்டே இருக்கும். இந்த ஸ்மார்ட் யுகத்தில் அதற்கும் தீர்வாக வந்துள்ளதுதான் கியூபோ ஏ.ஐ. உலகின் மிகவும் நவீனமான குழந்தை கண்காணிக்கும் கருவி என இது பெயர் பெற்றுள்ளது. பெற்றோர்கள், குழந்தை மருத்துவர்களும் இதன் செயல்பாட்டை பெரிதும் பாராட்டியுள்ளனர்.

இதில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளது. இது குழந்தையை 24 மணி நேரமும் கண்காணிக்கும். குழந்தை துணியால் தவறுதலாக மூடிக் கொண்டு விட்டால் கூட இது உடனடியாக ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை அனுப்பி விடும். அதேபோல குழந்தை படுக்கையில் நகர்ந்தாலே, கீழே விழும் ஆபத்து இருந்தாலோ உடனே எச்சரிக்கும்.

இரவிலும் துல்லியமாக தெரியும் வகையில் இதன் கேமராக்கள் உள்ளதால், நீங்கள் உறங்கினாலும், உங்கள் குழந்தையின் செயல்பாடுகளை இது தொடர்ந்து கண்காணிக்கும். அறையின் வெப்ப நிலையில் மாற்றம் அல்லது குளிர்ச்சி அதிகரித்தாலோ அதை பற்றிய விவரத்தையும் உங்கள் மொபைலுக்கு அனுப்பும். 18 மணி நேரம் படப் பதிவுகளை மீண்டும் கேட்கலாம். இதன் விலை ரூ.13,750 ஆகும். 

Next Story