வானவில் : கேனனின் புது வரவு இ.ஓ.எஸ். ஆர்.பி.
கேமராக்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கேனன் நிறுவனம் புதியரக மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இ.ஓ.எஸ். ஆர்.பி. என்ற பெயரில் புகைப்படக் கலைஞராக விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற கேமராவாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. மெக்னீசியம் அலாயில் உருவாக்கப்பட்ட மேற்பகுதி, பார்ப்பதற்கே அழகிய தோற்றப் பொலிவுடன் கூடிய வடிவமைப்பு இது அனைவரையும் கவர போதுமானதாக உள்ளது.
போர்ட்ரைட், ஸ்போர்ட்ஸ், லேன்ட்ஸ்கேப் உள்ளிட்ட இடத்துக்குத் தேவையான மோட்களில் இதில் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நுட்பம் உள்ளதால் நீங்கள் எடுக்க வேண்டிய பொருளை, காட்சியை மிகுந்த சிரமம் இல்லாமல் எடுக்க உதவுகிறது.
தேர்ந்த புகைப்படக் கலைஞர் தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கேமரா இருக்கவேண்டும் என்று நினைப்பர். அவர்களுக்கு ஷட்டர் ஸ்பீடை நிர்ணயிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. எனவே ஆரம்ப நிலை புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு மட்டுமின்றி, கைத்தேர்ந்த புகைப்படக் கலைஞருக்கும் ஏற்றதாக இது உள்ளது.
இதில் வை-பை வசதி உள்ளதால் எடுத்த புகைப்படங்களை உடனுக்குடன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப முடியும். லென்ஸ் கிட் ஆகியவற்றுடன் சேர்த்து இதன் விலை ரூ.2 லட்சமாகும்.
Related Tags :
Next Story