வானவில் : பேட்டரியில் இயங்கும் போர்டபிள் ஏர் கண்டிஷனர்


வானவில் : பேட்டரியில் இயங்கும் போர்டபிள் ஏர் கண்டிஷனர்
x
தினத்தந்தி 17 July 2019 8:47 PM IST (Updated: 17 July 2019 8:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போன்ற நகரங்களில் அதுவும் சமீப காலமாக கடுமையான வெப்பம் தகிக்கிறது. ஆண்டில் 9 மாதங்களும் வெப்பம்தான். இதனால் வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் கையில் ஏ.சி. இருந்தால் போதும் என்ற நினைப்பு மேலிடுகிறது.

 அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் போர்டபிள் ஏர் கண்டிஷனரை வடிவமைத்துள்ளது. இதன் எடை 6 கிலோ 350 கிராம் மட்டுமே. கையில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏர் கண்டிஷனர், பேட்டரியில் இயங்குவது கூடுதல் சிறப்பு. இதனால் இதை செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லலாம். 10 நிமிடத்தில் 17 டிகிரி குளிர்ந்த காற்றை வீசி அறையை குளிரச் செய்யும். 

கூடாரம் அமைத்து தங்கினால் அந்தக் கூடாரத்தை வெகு சீக்கிரத்தில் குளிர்விக்கும் திறன் கொண்டது. ஜீரோ பிரீஸ் 2.0 என்ற பெயரில் வந்துள்ள இந்த போர்டபிள் ஏர் கண்டிஷனர் விலை ரூ.22,500. பேட்டரியில் இயங்கினாலும் இது தொடர்ந்து 5 மணி நேரம் செயல்படும். யு.எஸ்.பி. சி போர்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

இதனால் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை இதிலிருந்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். எல்.இ.டி. விளக்கு, குறைவான சத்தம் ஆகியன இதன் சிறப்பம்சங்கள். போகுமிடமெல்லாம் குளிர்ச்சியை விரும்புவோருக்கு ஏற்றது இந்த போர்டபிள் ஏர் கண்டிஷனர்.


Next Story