வானவில் : தூக்கம் வரவழைக்கும் ‘பிலிப்ஸ் ஹெட் பேண்ட்’


வானவில் : தூக்கம் வரவழைக்கும் ‘பிலிப்ஸ் ஹெட் பேண்ட்’
x
தினத்தந்தி 17 July 2019 3:35 PM GMT (Updated: 17 July 2019 3:35 PM GMT)

தூக்கம் வராத நிலை, குறட்டையால் தூக்கம் கலைதல், ஸ்லீப் அப்னியா, இன்சோம்னியா இவை அனைத்தும் இரவில் சரிவர தூக்கம் வராத நிலையைக் குறிப்பிடும் வெவ்வேறு பெயர்கள்.

ஆக மொத்தத்தில் தூக்கம் வராததால் அவதிப்படுவோர் உலகெங்கிலும் உள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் ஒருபோதும் தூக்க மருந்தை பரிந்துரைப்பதில்லை. மாறாக தூக்கத்தை தூண்டும் பக்க விளைவு இல்லாத கருவிகளை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். 

மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் பிலிப்ஸ் நிறுவனம் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவோர் நிம்மதியாக தூங்க வழிவகுக்கும் ஹெட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ ரீதியாக இதன் செயல்பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. செயலி மூலமாக செயல்படக் கூடியது. பக்க விளைவுகள் இல்லாதது.

நிச்சயமாக தூக்கம் வராமல் அவதிப்படுவோருக்கு தீர்வாக அமையும். நன்கு தூங்குவதால் புத்துணர்ச்சி பெறுகிறது. டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் இந்த பேண்ட் உருவாக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோர், தூக்கம் வராமல் அவதிப்படுவோருக்கு மிகவும் ஏற்றது. இதன் விலை ரூ.28,000.

Next Story