தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்


தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 18 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கூறினார்.

தூத்துக்குடி, 

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் மதித்து செயல்பட வேண்டும். தூத்துக்குடி மாநகர பகுதியில் தினமும் 5 முதல் 6 விபத்துக்கள் வரை நடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தனது நண்பர்கள், குடும்பத்தினரை ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும்.

அதே போன்று கஞ்சா நடமாட்டம் தூத்துக்குடியில் அதிகமாக உள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையேயும் அதிக அளவில் கஞ்சா பழக்கம் உள்ளது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகள் முன்பும், மக்கள் கூடும் இடங்களிலும் காலை 7-30 மணிக்கு ஒரு போலீஸ்காரர் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

மேலும் தூத்துக்குடியில் சமீபத்தில் நகைபறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்து உள்ளன. தூத்துக்குடியில் 155 கண்காணிப்பு கேமிராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நகைபறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story