கடையநல்லூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
கடையநல்லூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
கடையநல்லூர்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தார் (வயது 64). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அக்ரி முருகேசன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சங்கிலி பூதத்தார் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கிலி பூதத்தார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story