சாலையில் உடலை வைத்து போராட்டம்: 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


சாலையில் உடலை வைத்து போராட்டம்: 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அதகப்பாடியை சேர்ந்த விவசாயி பொன்னன்(வயது 45). இவருடைய மனைவி ராதா(40) கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் தவறி கீழே விழுந்த ராதா எலும்பு முறிவு காரணமாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருடன் கோவையில் இருந்த பொன்னன் ரெயில் மோதி இறந்தார். வாகன சோதனை நடத்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று முன்தினம் இரவு அதகப்பாடியில் பொன்னன் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தர்மபுரி- பென்னாகரம் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இண்டூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமசாமி ஆயுதப்படைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

Next Story