திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்க தேர்தல்: தலைவர், நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்க தேர்தலில் தலைவர், நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு 2019-2022-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெறும் நாளாகும். இறுதிவேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது அனைத்து பதவிகளுக்கும் ஒவ்வொருவர் மட்டும் வேட்பு மனு செய்து இருந்ததால் போட்டியிட்ட அனைவரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தலைவராக பதவி வகித்து வந்த பாரி எம்.கணேசன் மீண்டும் தலைவராகவும், செயலாளராக பதவி வகித்த எவெரஸ்ட் கே.ரவி மீண்டும் செயலாளராகவும், புதியதாக போட்டியிட்ட எம்.வேலுமணி பொருளாளராகவும், உபதலைவராக பதவி வகித்த எம்.செல்வகுமார் மீண்டும் உப தலைவராகவும், உபசெயலாளராக பதவி வகித்த ஆர்.மோகன் மீண்டும் உப செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கனவே நிர்வாக குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த 15 உறுப்பினர்கள் கே.அழகேசன், டி.ஆர்.சந்திரசேகரன், ஏ.கார்த்திகேயன், எம்.கந்தசாமி, கே.மாதேஸ்வரன், ஆர்.முருகேசன், பி.மூர்த்தி, எஸ்.பிரபாகரன், எம்.பிரபு, எம்.ரமேஷ், ஏ.பி.ராஜசேகரன், எம்.சம்பத், எஸ்.செல்வராஜ், என்.செல்வராஜ், எஸ்.செந்தில்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த காலங்களில் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் இரு அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டு சங்க உறுப்பினர்கள் இடையே பெரும் செலவு செய்து ஆதரவு திரட்டி தேர்தலை சந்தித்து வந்தனர். இந்த முறை அவர்கள் தங்களுக்குள் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்தி அதில் இறுதியாக எடுத்த முடிவின்படி புதிய நிர்வாகிகளை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்து உள்ளனர். இது கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story