மாவட்ட செய்திகள்

கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் + "||" + Purnami Girivalam at the Pragadeswara Temple

கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி பிரகதீஸ்வரர் அருகில் உள்ள கணக்க வினாயகர் ஆலயத்தில் மாலை 3 மணி அளவில் மகா அபிஷேகமும், தீபாராதனையும், 5 மணி அளவில் பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு 16 வகையான திரவியங்களுடன் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் தொடங்கிய பவுர்ணமி கிரிவலம் குருக்கள் தெரு, கணக்க வினாயகர் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.