வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்த இளைஞர்கள்


வாய்க்கால்களை சொந்த செலவில் சீரமைத்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 7:57 PM GMT)

கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீர் சேமிக்கும் பணியில் இளைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீர் சேமிக்கும் பணியில் இளைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயம், குடிநீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான விவசாயத்துக்கான ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, வடகாடு மற்றும் பல கிராமங்களில் நீர்நிலை சீரமைப்பு பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாங்காட்டில் நிலத்தடி நீரை சேமிப்பதற்காக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில், வெளிநாடுகளில் தங்கி வேலை செய்யும் இளைஞர்களிடம் நிதி திரட்டி கடந்த மாதம் 24-ந் தேதியில் இருந்து குளம், ஏரிகளுக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மாங்காடு கிராமத்தில் மொத்தம் உள்ள 10 குளங்களுக்கான வாய்க்கால்களில் 7 குளங்களுக்கான வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மற்ற குளங்களின் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு அரசிடம் நிதி பெற்று குளம், ஏரிகள் தூர்வாரப்படும் என இளைஞர்கள் தெரிவித்தனர். இளைஞர்களின் இந்த பணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story