மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் - எம்.எல்.ஏ. வேண்டுகோள்
மந்திவலசை வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரமக்குடி,
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வங்காருபுரம், பள்ளப்பச்சேரி ஆகிய இடங்களில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் கதர் துணிகளுக்கு வழங்கப்பட்டது போல் கைத்தறிக்கும்5சதவீத வரியை நீக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். போகலூர் ஒன்றியம் மந்திவலசை கிராமத்தில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும். அதே போல் சூடியூர், செவ்வூர் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் அமைக்க வேண்டும்என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மந்தி வலசை வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:-
பரமக்குடி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது வைகை ஆற்றில் கலக்கிறது. இதனால் வைகை ஆறு மாசுபடுகிறது. எனவே கழிவு நீர் ஆற்றில் கலக்காத வகையில் வைகை ஆற்றின் கரையில் கால்வாய் அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.நகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் கலையரங்கங்கள் அமைக்க வேண்டும்.
நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பரமக்குடி ஒன்றியம் வழிமறிச்சான் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், கமுதி ஒன்றியம் உடையநாதபுரம் அரசு ஆரம்பப்பள்ளியை நடு நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும். தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலகத்துடன் கூடிய போட்டித் தேர்வு மையம் அமைக்க வேண்டும். சந்தைக் கடையில் உள்ள மின் விளையாட்டு அரங்கில் நீச்சல்குளம் அமைக்க வேண்டும். நயினார்கோவில் நாகநாதர் சாமி தெப்பக்குளத்தை சீர் செய்து பக்தர்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டும். பாண்டியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வங்காருபுரம், பள்ளப்பச்சேரி ஆகிய இடங்களில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் கதர் துணிகளுக்கு வழங்கப்பட்டது போல் கைத்தறிக்கும்5சதவீத வரியை நீக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். போகலூர் ஒன்றியம் மந்திவலசை கிராமத்தில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும். அதே போல் சூடியூர், செவ்வூர் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் அமைக்க வேண்டும்என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story