கூடுதல் மகசூல் பெற பரிசோதனை செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் - அதிகாரி தகவல்


கூடுதல் மகசூல் பெற பரிசோதனை செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் மகசூல் பெற விவசாயிகள் பரிசோதனை செய்து சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று விதைச்சான்று உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. விதை தான் விளைச்சலுக்கு நல்வித்து. எனவே ஆடி பட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் விதை விதைக்க இருக்கும் விவசாயிகள் விதைக்காக தாங்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் விதை குவியல்களில் இருந்து பணி விதை மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பி முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவை ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் மட்டுமே விதைகளை விதைத்திட வேண்டும். பரிசோதனை செய்து சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.

இதற்கு விவசாயிகள் செய்ய வேண்டியது, விதைக்காக உற்பத்தி செய்து வைத்திருக்கும் விதைக்குவியல்களில் இருந்து நெற்பயிருக்கு 400 கிராமும், பயறு வகைகள், நிலக்கடலை பயிருக்கு 1 கிலோவும், எள் பயிருக்கு 70 கிராமும் விதை மாதிரி எடுத்து ஒரு துணிப்பையில் நிரப்பி பயிர், ரகம், முழு வீட்டு முகவரி குறிப்பிட்டு, அத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.30ஐ விதை பரிசோதனை கட்டணமாக செலுத்தி சிவகங்கையில் உள்ள விதை பரிசோதனை நிலைய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் கொடுத்த விதை மாதிரியை பரிசோதனை செய்து முடிவுகளை அவர்களது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற விதைகளை விதைக்கும் போது 25 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைப்பதுடன், கலப்படம் இல்லாத விதை கிடைப்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் விதைக்காக உற்பத்தி செய்து வைத்துள்ள விதைக்கு வயல்களில் இருந்து அவசியம் பணி விதை மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பி பயன் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story