புதிதாக ஆட்களை தேர்வு செய்ய எதிர்ப்பு; அரசு மருத்துவ கல்லூரி டீனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்


புதிதாக ஆட்களை தேர்வு செய்ய எதிர்ப்பு; அரசு மருத்துவ கல்லூரி டீனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக ஆட்களை தேர்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவ கல்லூரி டீனை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 70 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் கடந்த 9 ஆண்டுகாலமாக குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்யக்கோரி பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் சார்பில் செவிலியர் மற்றும் வார்டு சுகாதார பணியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை கண்டித்தும், தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று காலை கல்லூரி டீனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்று கல்லூரி டீனை சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த அறிவிப்பு மேலிடத்தில் இருந்து வந்தது என்று கூறினார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து சட்டசபைக்கு சென்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்து பேசினர். அப்போது அவர் இது தொடர்பான கோப்புகள் தற்போது என்னிடம் இல்லை. எனவே நாளை(இன்று) பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்று கூறினார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story