நில அளவை அறிக்கையை கொடுக்க ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
நில அளவை அறிக்கையை கொடுப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
சிந்துதுர்க் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது நிலத்தில் நில அளவை நடந்தது. பின்னர் அவர் நில அளவை அறிக்கையை வாங்குவதற்காக மால்வான் பகுதியில் உள்ள சர்வே அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு ஊழியராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரா பரமசாகர் (வயது 45) என்பவர் நில அளவை அறிக்கையை அவரிடம் கொடுப்பதற்கு ரூ.30 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இதை கேட்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.
கைது
பின்னர் இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் ஊழியர் ராஜேந்திரா பரமசாகரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக புகார் கொடுத்தவரிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்து அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த யோசனையின்படி அந்த நபர் முதல் தவணையாக ரூ.10 லட்சம் கொண்டு வந்திருப்பதாக ராஜேந்திரா பரமசாகரை சந்தித்து அவரிடம் பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story