சயான் கோலிவாடாவில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வற்புறுத்தல்
பலத்த மழையால் சயான் கோலிவாடாவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
மும்பை,
மும்பையில் அண்மையில் பெய்த பலத்த மழையால் சயான் கோலிவாடா பிரதிக்ஷா நகரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. அந்த சாலையை பார்வையிட்டார். இதையடுத்து அவர் எப் வடக்கு வார்டு மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சென்று சாலைகளின் மோசமான நிலையை காண்பித்தார். மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க அவர் அதிகாரிகளை வற்புறுத்தினார்.
Related Tags :
Next Story