கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டம்


கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 3:30 AM IST (Updated: 18 July 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் பிரிவில் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு தீர்மானத்தின்படி, ஊதியம் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது. 18-ந் தேதி காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவது எனவும், அதே சமயம் அவசர கிசிச்சை பிரிவுகள் வழக்கம் போல் செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் எதிரே நடந்த இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சதீஷ், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, முதுநிலை மருத்துவ கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதுநிலை கல்வி முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கம், ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story