மாவட்ட செய்திகள்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் ‘யார்டு’ பகுதியில் நவீன எந்திரங்கள் மூலம் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம் + "||" + New Intercity Improvement Works with Modern Machines at Trichy Junction Railway Station

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் ‘யார்டு’ பகுதியில் நவீன எந்திரங்கள் மூலம் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் ‘யார்டு’ பகுதியில் நவீன எந்திரங்கள் மூலம் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரம்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் ‘யார்டு’ பகுதியில் நவீன எந்திரங்கள் மூலம் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை விமான நிலையத்திற்கு இணையாக தரம் உயர்த்தும் வகையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் முக்கிய பிரமுகர்கள் வாகனங்களில் வருவதற்கு வசதியாக நுழைவு வாயில்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாதாரண பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கும், உள்ளே செல்வதற்கும் பாரதியார் சாலையில் புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.


இது தவிர பிளாட்பாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் ரெயில் நிலையத்தின் உள் பகுதியில் என்ஜின்களை இயக்குவதற்கு வசதியாக மாற்று தண்டவாளங்களும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. குட்ஷெட் மேம்பாலத்திற்கு அடியில் இந்த பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை பொறுத்தவரை பயண நேரம் தவிர மற்ற நேரங்களில் ரெயில்களை நிறுத்தி வைப்பதற்கான ‘யார்டு’ கிராப்பட்டி பகுதியில் அமைந்து உள்ளது. ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் இருந்து இந்த யார்டுக்கு ரெயில்கள் செல்வதற்கு வசதியாக தற்போது புதிததாக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தண்டவாளங்களை காலி இடத்தில் வைத்து ‘ரெடிமேட்’ ஆக தயாரித்து நவீன எந்திரங்கள் உதவியுடன் தூக்கி சென்று யார்டு பகுதியை இணைக்கும் வகையில் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஜல்லி கற்கள், காங்கிரீட் கட்டைகள் தயார் நிலையில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.