கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து 4 பேர் கைது


கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 19 July 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன்கள் சுரேஷ்(வயது51), ஆனந்த்(45). இவர்கள் 2 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேசின் மகளை அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடைய மகன்கள் கணேஷ் (25), ராஜா(22), மணி மகன்கள் விக்னேஷ்(27), விக்ரம்(22) ஆகிய 4 பேரும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை சுரேஷ் தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

கத்திக்குத்து

அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆனந்த், கணேஷ் ஆகிய 2 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், விக்னேஷ், விக்ரம், ராஜா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story