பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில், ஏரிகள் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு


பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில், ஏரிகள் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2019 4:00 AM IST (Updated: 19 July 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார்.

கடலூர், 

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருவதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இ்தன்படி கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 36 ஏரிகளில் குடிமராமத்து பணிகளும், 792 ஏரிகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகளும், நிலத்தடி நீரை உயர்த்திடும் வகையில், ஆற்று நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் பண்ருட்டி வட்டத்தில் 274 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறக்கூடிய வகையில் திருவதிகை கிராமத்தில் உள்ள செட்டிபட்டடை ஏரி, கால்வாய், கரைகளை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 64.36 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறக்கூடிய வகையில் சேராக்குப்பம் அய்யனேரியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளும், 41.73 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறக்கூடிய வகையில் கண்ணாடி கிராமம் கண்ணாடி ஏரியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) சிங்காரவேலு, உதவி பொறியாளர் கபிலன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story