கோழிக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை - மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு


கோழிக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை - மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 July 2019 3:30 AM IST (Updated: 19 July 2019 6:08 AM IST)
t-max-icont-min-icon

கோழிக்கடைக்காரர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மதுரை, 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் கார்த்திக்ராஜா (வயது 30). அதே பகுதியில் கோழி விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது உறவினர் தெய்வம் (45). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. இந்தநிலையில் கார்த்திக்ராஜா கடந்த 2014-ம் ஆண்டில் தனது கோழிக்கடையில் இருந்தார். அப்போது அங்கு தெய்வம் வந்தார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தெய்வம் அங்கிருந்த இரும்புக்கம்பியை எடுத்து கார்த்திகேயனை தாக்கினார். இதில் படுகாயமடைந்த கார்த்திக்ராஜா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டிபோலீசார் வழக்குபதிவு செய்து தெய்வத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தமிழ்செல்வம் ஆஜரானார். விசாரணை முடிவில், தெய்வத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story