மாவட்ட தூதராக ‘வேண்டாம்’ என்று பெயரிடப்பட்ட மாணவி நியமனம் கலெக்டர் நேரில் அழைத்து கவுரவித்தார்
பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்துக்கு மாவட்ட தூதராக ‘வேண்டாம்’ என்று பெயரிடப்பட்ட மாணவி நியமனம் கலெக்டர் நேரில் அழைத்து கவுரவித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த நாராயணபுரம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் அசோகன், கவுரி தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு மேலும் பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காக 3-வதாக பிறந்த குழந்தைக்கு வேண்டாம் என்று பெயரிட்டனர். வேண்டாம் (வயது 19) தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கல்லூரியில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் மாணவி வேண்டாமை ஜப்பான் நாட்டு நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் பணியில் அமர்த்தி கொண்டது.
இதை அறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று கல்லூரி மாணவி வேண்டாமை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் சிறப்பு தூதராக நியமனம் செய்து கவுரவித்தார். அவருடன் மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, மாணவி வேண்டாமின் தந்தை அசோகன், கல்லூரி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story