உளுந்தூர்பேட்டை அருகே, தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே, தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் கஞ்சமலை(வயது 48), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஞ்சமலை உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கிரிஜா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சமலை உடல் நலக்கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story