சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 July 2019 3:55 AM IST (Updated: 20 July 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிவகாசி,

சிவகாசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட பாரைப்பட்டி, சிவகாசி அர்பன், சாட்சியாபுரம், செவல்பட்டி, வெம்பக்கோட்டை, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதனால் பாரைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, கண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்குரதவீதி, வேலாயுதம் ரோடு, அண்ணாகாலனி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, போலீஸ்காலனி, இ.பி., காலனி, விஸ்வம்நகர், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம், வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, டி.துலுக்கன்குறிச்சி, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம்.

சாத்தூர் அருகே உள்ள நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, எம்.மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது. இதனை சிவகாசி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான லட்சுமிநகர், என்.ஜி.ஓ. நகர், கருப்பசாமிநகர், குல்லூர்சந்தை, வடமலைக்குறிச்சி, பெரியவள்ளிக்குளம், பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதனை செயற்பொறியாளர் அகிலாண்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Next Story