மோட்டார் சைக்கிள்கள் மோதல், உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல், உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் குமார் (வயது39). இவர் வேதாரண்யத்தில் உள்ள உப்பு உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு மேட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரியாப்பட்டினம் சாலையில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் படுகாயமடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story