விருத்தாசலத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 ரவுடிகள் கைது


விருத்தாசலத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 20 July 2019 4:15 AM IST (Updated: 20 July 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்,

விருத்தாசலம் கம்பர் தெருவை சேர்ந்தவர் ராமையா(வயது 70). கடந்த மாதம் 14-ந்தேதி இவர் தனது செங்கல் சூளையில் இருந்து பூதாமூர் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, அவரை புதுப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(33), மணலூரைச்சேர்ந்த பிரேம்(42) ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக திட்டி கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமையா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து சுரேஷ், பிரேம் ஆகிய இருவரையும் கைது செய்தார். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இதில் சுரேஷ் மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், பிரேம் மீது 2 வழக்குகளும், வடலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.

இதனால் இரு ரவுடிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கடலூர் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுப்படி சுரேசையும், பிரேமையும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல்கள் கடலூர் மத்திய சிறை அதிகாரிகள் மூலம் சுரேசுக்கும், பிரேமுக்கும் வழங்கப்பட்டது. 

Next Story