கோட்டக்குப்பம் அருகே பள்ளி ஆசிரியை கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு


கோட்டக்குப்பம் அருகே பள்ளி ஆசிரியை கடத்தல் வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 July 2019 3:30 AM IST (Updated: 21 July 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பம் அருகே பள்ளி ஆசிரியையை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண், நம்பிக்கைநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக ஆசிரியை தனது பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்றார். ஆனால் மாலையில் பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து ஆசிரியையின் பெற்றோர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அந்த புகாரில், தங்கள் மகளை மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் தியாகு (28) என்பவர் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட ஆசிரியையும், அவரை கடத்திச்சென்ற தியாகுவையும் தேடி வருகின்றனர்.

Next Story