மாவட்ட செய்திகள்

திருவக்கரையில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் + "||" + In tiruvakkarai Stir the public road asking for drinking water

திருவக்கரையில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவக்கரையில்குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவக்கரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், 

வானூர் தாலுகா திருவக்கரை திரவுபதியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.50 மணியளவில் திருவக்கரை மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாக்கம்- திருவக்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 7.10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்திகள்

1. ராணிப்பேட்டையில் த.மு.மு.க.வினர் சாலை மறியல்
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய த.மு.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
2. அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகளால் தாக்கப்பட்ட தொழிலாளி சாவு; உறவினர்கள் சாலை மறியல்
தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளிகளால் தாக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
3. கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 எம்.பி.க்கள் உள்பட 1,300 பேர் கைது - போக்குவரத்து பாதிப்பு
கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.பி.க்கள் உள்பட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலின் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. விழுப்புரம் மாவட்டத்தில், 7 இடங்களில் சாலை மறியல்; 323 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 323 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பொதுமக்களே வன்முறையில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்; மம்தா பானர்ஜி வேண்டுகோள்
தயவு செய்து வன்முறையில் ஈடுபடாதீர்கள் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.