உத்தரபிரதேச பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உத்தரபிரதேச பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 July 2019 4:15 AM IST (Updated: 21 July 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச பா.ஜனதா அரசை கண்டித்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச பா.ஜனதா அரசை கண்டித்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. நீங்கள் சின்னப்பா பூங்காவிற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் எனக்கூறினார்கள். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சின்னப்பா பூங்கா வரை ஊர்வலமாக சென்று, சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உத்தரபிரதேச பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

Next Story