ஆவுடையார்கோவில் அருகே கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்


ஆவுடையார்கோவில் அருகே கோவில் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 21 July 2019 4:00 AM IST (Updated: 21 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயலில் மஞ்சனத்தி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 6-ம் ஆண்டு சந்தனகாப்பு விழா நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்,

ஆவுடையார்கோவில் அருகே புண்ணியவயலில் மஞ்சனத்தி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் 6-ம் ஆண்டு சந்தனகாப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 38 வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் பெரியமாட்டுவண்டி பிரிவில் 6 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல்பரிசை புண்ணியவயல் மந்தினி காளி மாட்டுவண்டி பிடித்தது. இதேபோல நடுமாட்டுவண்டி பிரிவில், 9 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் செல்வனேந்தல் சுந்தர்ராஜன் மாட்டுவண்டி முதல் இடத்தை பிடித்தது.

இதேபோல கரிச்சான் மாட்டுவண்டி பிரிவில் 23 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல்பரிசை பொய்கைவயல் முத்துகருப்பர் மாட்டுவண்டி பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை முன்னிட்டு ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாட்டுவண்டி பந்தயத்திற்கான ஏற்பாடுகளை புண்ணியவயல் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story