சிவசேனாவின் 3-ம் தலைமுறை தலைவருக்கு அரியணை ஆசையா?
பால்தாக்கரே என்ற பெயரை கேட்டாலே மராட்டிய அரசியல் அரங்கம் அலறும். அரசு பதவி எதையும் வகிக்காமல் அரசியலில் கோலோச்சி வந்தவர்.
சிவசேனா கட்சியை அவர் 1966-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி தொடங்கினார். மராட்டியர்களின் நலன், மும்பையில் மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவை சிவசேனாவின் தொடக்க கால பிரதான நோக்கமாக இருந்தது. இதனால் மராட்டியர்கள் பால்தாக்கரேயை பின்தொடர தொடங்கினர்.
1995-ம் ஆண்டு பா.ஜனதா ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பால்தாக்கரே ஏற்கவில்லை. மாறாக தனது கட்சியை சேர்ந்த மனோகர் ஜோசியையும், பின்னர் நாராயண் ரானேயையும் முதல்-மந்திரி ஆக்கினார். அவர் கை காட்டியவர்கள் முதல்-மந்திரியாகவும், மந்திரியாகவும் பதவி வகித்தார்கள். ஆனால் அவர்களின் கடிவாளம் பால்தாக்கரேயின் கையில் இருந்தது.
தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தாலும், பதவி சுகத்தை அவர் நெருங்கவிடவில்லை. அரசு பதவி எதையும் வகிக்காத அவரை பல தேசிய தலைவர்கள் மும்பையில் உள்ள அவரது ‘மாதோ’ இல்லம் சென்று சந்தித்து வந்தனர்.
அவரது மறைவுக்கு பின்னர் மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவரானாார். அவரும் பால்தாக்கரே பாணியையே பின்பற்றி வருகிறார். 2014 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ள சிவசேனாவின் உதவியை நாடியது. இதற்கு உடன்பட்டு மந்திரி சபையில் சிவசேனா சேர்ந்தது. ஆனால் உத்தவ் தாக்கரே அரசு பதவிக்கு வரவில்லை. மும்பை மாநகராட்சி பல தடவை சிவசேனா வசம் ஆனது. ஆனால் பால்தாக்கரேயின் குடும்பத்தினர் மேயர் பதவி வகிக்கவில்லை. அவரது குடும்பத்தினர் இதுவரை தேர்தலில் போட்டியிடவும் இல்லை. ஆனாலும் அவர்கள் சிவசேனாவின் அசைக்க முடியாத அச்சாணியாக செயல்பட்டு வருகிறார்கள்.
அரசாங்க பதவிகளை நாடாமல் அரசியல் நடத்தி வரும் பால்தாக்கரே குடும்பத்தினரிடம் இருந்து மற்றவர்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.
ஆனால் சிவசேனாவின் இளைஞர் அணி(யுவசேனா) தலைவராக இருக்கும் ஆதித்ய தாக்கரே, தனது தந்தை உத்தவ் தாக்கரே, தாத்தா பால்தாக்கரேயின் பாதையில் இருந்து விலகி செல்வதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. 29 வயதான ஆதித்ய தாக்கரே, ‘ஜன் ஆசிர்வாத் யாத்ரா’ என்ற மாநிலம் தழுவிய பயணத்தை கடந்த வாரம் தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்வைத்து சிவசேனாவை வலுப்படுத்த இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடப்பதாக கருதப்பட்டது.
ஆனால் ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவரது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட தொடங்கி விட்டனர். சிவசேனாவின் 3-ம் தலைமுறை தலைவரான ஆதித்ய தாக்கரே இதை மறுக்கவும் இல்லை. மாறாக, நான் முதல்-மந்திரி ஆவதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று கூறி விட்டார். சுற்றுப்பயணத்தின்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், “இளைஞர்கள் சந்திக்கும் கல்வி பிரச்சினையை எதிர்கொள்ள நீங்கள் கல்வி மந்திரியாக ஆகுவீர்களா?” என்று மாணவர் ஒருவர் கேட்டார். அதற்கு “உள்துறை தான் முக்கிய இலாகாவாக கருதப்படுகிறது, ஆனால் எதிர்காலத்தை பார்க்கும்போது, அதற்கு சமமானது தான் கல்வி இலாகா. நிச்சயம் நான் கல்வி துறையில் பணியாற்ற விரும்புகிறேன்” என்று ஆதித்ய தாக்கரே பதிலளித்து விட்டார்.
இதன் மூலம் அரசியலில் தனது 53 ஆண்டு குடும்ப பாரம்பரியத்தை மீற ஆதித்ய தாக்கரே முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவரது கருத்து சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால், ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி ஆவரா? என்பதை உறுதிப்பட கூற முடியாவிட்டாலும், அவர் மந்திரி சபையில் அங்கம் வகிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

Related Tags :
Next Story