மாகி தொகுதிக்கான திட்டங்கள் குறித்து நாராயணசாமி ஆலோசனை


மாகி தொகுதிக்கான திட்டங்கள் குறித்து நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 21 July 2019 4:45 AM IST (Updated: 21 July 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாகி தொகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மாகி தொகுதியில் வெற்றிபெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரன் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால் அவர் வலியுறுத்தும் திட்டங்களை அரசு நிறைவேற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாகி தொகுதி பிரச்சினைகளை தீர்க்கக்கோரி நாளை (திங்கட்கிழமை) கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சட்டசபை நோக்கி கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மாகி தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க அதிகாரிகள் கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அரசு செயலாளர்கள் அன்பரசு, சரண், அசோக்குமார், கலெக்டர் அருண், அரசுத்துறை இயக்குனர்கள் மலர்க்கண்ணன், ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாகி தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.

அந்த திட்டங்களை விரைந்து முடித்து தருமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

Next Story