பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால்நிலையம் முன்பு நாகை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கலையரசன், நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ், துணை தலைவர் உதயசந்திரன், கீழையூர் வட்டார தலைவர் சுப்பிரமணியன், நகர துணை தலைவர் ராமன் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். 

Next Story